என்னதான் செல்வம் சேர்த்தாலும் படித்து முடித்து அய் ஏ எஸ் ஆ னாலும் நீ யார் சூத்திரன்தானே பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன்தானே அப்படித்தானே இந்த நாட்டின் சாத்திரம் சொல்கிறது அப்படித்தானே இந்தநாட்டின் கோவில்கள் சொல்கின்றன நீ கட்டிய கோவிலின் கருவறைக்கு வெளியில்தானே நீ நிற்கிறாய் இந்தமதத்தை அழிக்காமல் இந்தக் கோவில்களை அழிக்காமல் நீ எப்படி இந்த நாட்டின் மானமுள்ள குடிமகனாகஉன்னை கருதிக் கொள்ள முடியும் உன்னை இரண்டாந்தரமாக்கும் எதுவும் உன்னுடையதல்ல அது உனதுதேசமாக இருந்தாலும் சரி ஏன் மொழியாகவே இருந்தாலும் சரி. உன்னை மானமுள்ள மனிதாகநடத்துவதற்கு தடையாக எது இருந்தாலும் தகர்த்தெறிவதே உனது கடமையாகும். இதுதான் தலைவர்பெரியார் தன் இறுதி மூச்சுள்ள வரையில் தமிழருக்கு தந்து சென்ற செய்தியும் பணி யுமாகும். தன்மானம்தான்
வாழ்வின் சாரம் என்று சிந்தித்தவர் பெரியார். தன்மானத்துடன் மனிதன் வாழும் வாழ்க்கையும் அதற்கானபோராட்டமுமே மனிதர்களை மிகச் சிறந்த பரிணாமத்திற்கு இட்டுச் செல்லும் என்று சிந்தித்தார் பெரியார்.
அவருடையமூச்சுக்காற்றும்அவ்விதமேஇயங்கியது.உண்மையில்அனைத்துபேதங்களையும்
கருவறுக்கும்அடிப்படைச் சூத்திரத்தை உள்ளடக்கிய வாழ்க்கை வாய்ப்பாடாகும் இத்தத்துவம்.தமிழர் விடுதலைக்கு மட்டுமல்ல உலகின் எந்த பிரிவினரின் விடுதலைக்கும் பொருந்துகின்ற தத்துவம்தான்இது. பெண்விடுதலையையும் இதே வாய்ப்பாட்டை பயன்படுத்தியே புரிந்து கொள்ள வேண்டும். படிப்புவேலைவாய்ப்பு சொத்துரிமை இவையெல்லாம் பெண் விடுதலைச் சமூகத்தைப் படைக்கும் பாதையின்படிக்கட்டுகள்தானே தவிர எல்லைக் கற்களல்ல.
இன்று இந்த மண்ணி ல் பெண்ணி ன் வாழ்க்கை என்பது என்னவாக இருக்கிறது பெண்ணைக் கருவிலேயேவெறுக்கும் நிலை இன்னும் தொடர்கிறது என்ற போதிலும் இந்தக் கட்டுரையில் அந்த நிலையெல்லாம் ஒதுக்கிவைத்து விட்டு பெண்ணு க்கு என்ன இல்லை இப்போது என்று நம்மை கேள்வி கேட்கும் சமூகத்தையே நமது களமாக எடுத்துக் கொள்வோம். இன்று பெண் குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள். உண்மைதான். வேலைக்கு
அனுப்புகிறார்கள். சரி. ஆ னால் இந்தக் கல்வி வேலைவாய்ப்பு இவற்றை பயன்படுத்தி பெண் தன் வாழ்க்கையைதான் வாழ அனுமதிக்கப் படுகிறாளா திருமணம் வரை தந்தையின்பாதுகாப்பில் அதன்பின் கணவனின்கட்டுப்பாட்டில் இறுதியாக மகனின் தயவில் என்று வாழ்கின்ற விதியை இன்று வரை இந்த சமுதாயம் ஏதாவதொருவகையிலாவது திருத்தி எழுதியிருக்கிறதா என்ன படித்திருந்தால் என்ன சமூகத்தில் என்ன நிலை வந்தால்தான்என்ன இந்த வாழ்க்கை சட்டகத்திற்குள் என்ன தன்மானம் வாழ்கிறது பெண்ணு க்கு எப்படி சூத்திரப் பட்டமும்
பஞ்சமன் பட்டமும் ஒழியாமல் இந்த நாட்டின் வெகுமக்களுக்கு விடுதலை இல்லை என்று நினைக்கிறோமோஅப்படித்தானே இந்தத் திருமதிகள் பட்டம் ஒழியாமல்பெண்களுக்கு விடுதலை கிடையாது என்பதும் திருமதி பட்டங்கள் ஒழியாமல் தேவடியாள் பட்டமும் விதவைப்
பட்டமும் ஒழியுமா ஒரு நாளும் அது சாத்தியமில்லை
இந்த வார்த்தைகள் சாகாத வரையில் பெண் வாழ்க்கைஎன்பது விடுதலை வாழ்க்கையுமில்லை.
பெண் விடுதலை என்பது ஒட்டுமொத்த இந்த மானுட வாழ்வின் மறு சீரமைப்புடன் தொடர்புடையகருத்தியல் என்பதை புரிந்து கொள்ளாத வரையில் பெண் விடுதலை என்பதை பெண் கல்வியாகவும் பெண்ணி ன்வேலை வாய்ப்பாகவும் ஏன் பெண்ணி ன் உடையாகவும் கூட நாம் ஓர் எல்லைக்குள் சுருக்கிதான் பார்த்துக்கொண்டிருப்போம்.
ஏன் கல்வி கற்ற பின்னும் பொருளாதார வாய்ப்பு கிடைத்த பின்னரும் பாதுகாப்புக்கு ஓர் ஆண்துணைவேண்டும் என்று பெண் நினைக்க வேண்டியிருக்கிறதுஏன் இன்னும் இந்த மண்ணி ல் திருமணத்திற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் சிறிது கூட குறையாமல்இருக்கிறது
பிறக்கப் போகும் பிள்ளை தனது பெயரைச் சொல்லப் போவதில்லை தனது பெயரை அதன்
முதலெழுத்தாய் போடப் போவதில்லை என்று தெரிந்த பின்னரும் எதற்காக உயிரைப் பணயம் வைத்து பெண்பிள்ளை பெறுகிறாள்கடைசி காலத்தில் மகன் வீட்டில் ஒரு காவல் நாயைப் போல் வாழும் வாழ்க்கை நிதர்சன உண்மையாகக்கண் முன்னே விரிந்து கிடக்க இன்னும் ஏன் தாய்மை புனிதமானது என்ற பொய்யை அவள் நம்பிக்கொண்டிருக்கிறாள்
மனிதப் பிறவியாக வாழ்வது என்றால் என்ன என்றே தெரியாத நிலையில் மனைவியாகவும்தாயாகவும்மாமியாராகவும் வாழ்வதிலேயே ஏன் இன்னும் முடங்கிக் கிடக்கிறாள்
இந்தக் கேள்விகளைக் கேட்டால் நம்முடன் இருக்கும் தோழர்களே அதிர்ந்து போகிறார்கள். இந்த
வாழ்க்கை முறைக்கு மாற்று என்ன என்று ஓர் உடனடித் தீர்வைச் சொல்லும்படி நெருக்குகிறார்கள்.
கிரிமினல் பிரசி கோட் 125 நோக்கம் குடம்ப அமைப்பைக் காப் பாற்றுவதுதான் முதியோர்களைக் காப் பாற்றுவதுஅல்ல பிரித்து வைத்து பராமரிக்கச் சொல் அதுதான் தீர்வுபெண் விடுதலை இயக்கங்கள் மய்யம் கொள்ள வேண்டிய கேள்விகளாக இவை நம் கண் முன்னே விரிந்து
நிற்கின்றன,
ஒவ்வெ £ரு ஆ ணு க்கும் ஒவ்வொரு பெண் வீட்டுக்கு ஓர் அடுப்பங்கரை
.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Spoken English franchise in Bangalore
Franchise for spoken English classes
Spoken English franchise in Punjab
English franchise centre in Chennai
Spoken English franchise in Andhra Pradesh
Best spoken English franchisor
Best franchisor in spoken English
Spoken English franchise in Ahmedabad
Spoken English franchise in Maharashtra
Post a Comment