Friday, August 22, 2008

தேசங்கள் பெண் களு க்கானவையாக இல்லை....ஆனால் பெண் களு க்கு தேசங்கள் வேண் டும் ----ஓவியா

ஏமாற்றம் சுதந்திர மனிதனாக இருக்கும் நிலையில் நம்பிக்கையோ அடிமையாக இருக்கிறது
சுதந்திர சிந்தனைக்கும் மதத்துக்குமான போராட்டமானது மிக நீண் ட வரலாறாகும். மதம் பூமி
தட்டை என்றது...... உருண் டை என்று சொன்னவர்களை அடித்துத் துரத்தியது. துரத்தப்பட்
டவர்கள் வராலாறாய் வாழ்கிறார்கள். பூமிதான் அண் ட சராசரங்களின் மய்யம் என்றது மதம்.
ஒரு முழு வெள்ளைத்தாளில் வைக்கப்படும் ஒரு புள்ளியின் இடத்தைக் கூ ட அண் ட வெளியில்
பூமி வகிக்கவில்லை என்றது அறிவியல். உண் மையைச் சொன்னவர்கள் அய்ரோப்பாவின்
மதமுறைத் தண் டனைச் சாலைகளில் அனுபவித்த கொடுமைகளை நாகரீக சமுதாயம் எழுதி
வைக்கக்கூட கூசும். மரண ம் பாவத்தின் சம்பளம் என்றது மதம். பாவம் செய்தாலும்
செய்யாவிட்டாலும் மரண ம் நிச்சயம் என்றது அறிவியல். மனிதனுக்காகதான் இறைவனால்
உலகம் படைக்கப்பட்டது என்றது மதம். மனிதன்தான் இயற்கையைப் பொருட்படுத்த வேண் டிய
நிலையில் இருக்கிறான் . இயற்கைக்கு மனிதன் ஒரு பொருட்டேயில்லை என்றது அறிவியல்.
இங்கு மனிதன் என்று மதம் சொன்னது ஆணை மட்டும்தான். ஆண் டவன் படைப்பில் அதி
அற்புதமான பிறவி மனிதன் - அது ஆண் . பெண் ணே £ பிற இயற்கை அமைப்புகளைப் போலவும்
பிற உயிரினஙக்ளைப் போலவும் இவற்றிற்கெல்லாம் பின்னாலும் கடைசியாகவும் கடவுளால்
ஆணு க்காகப் படைக்கப் பட்டவள். இப்போது அறிவியல் தொடுத்த போராட்டத்தின் தொடர்
சங்கிலியாய் மதத்தை எதிர்த்துத் திரள வேண் டியவர்கள் பெண் கள். அந்தப் போராட்டத்தில்
அடையாளம் காண ப்படுபவர்களிடம் மதம் இன்னும் குரூரமாகத்தான் நடந்து கொள்கிறது.
தஸ்லிமா இந்தப் போராட்டத்தில் சுதந்திர சிந்தனை அணி யின் இன்றைய கண் ணி யாக தன்னை
அடையாளப் படுத்துகிறார். அவர் சொல்கிறார்.
இயற்கை பெண் களை மனிதப் பிறவிகள் என்கிறது. ஆண் கள் அதனை மறுப்பதற்காக
மதங்களைப் படைத்திருக்கிறார்கள்,
மாற்றுக் கருத்துக்களு க்காக மரண தண் டனை சுமத்துவது எத்தனை கற்காலத்திலிருந்து இன்றும்
தொடர்ந்து கொண் டிருக்கிறது? இன்று தஸ்லிமாவை உயிரோடு கொளு த்த முடியவில்லை
என்பதில் பெருமைப்பட என்ன இருக்கிறது! அந்த எண் ண ம் இன்னும் மனித சமுதாயத்திலும்
வலிமையோடு மிச்சமிருக்கிறதே! நாமெல்லாம் இருந்து என்ன பயன்? அந்த அம்மையார்
தற்சமயம் பின்வாங்கியிருக்கிறார்களே? இது நமக்கு அவமானமில்லையா?
மதத்தை மிகவும் அரள வைத்த ஒரு அறிவியல் கண் டுபிடிப்பு எது தெரியுமா? அச்சுக் கலையின்
கண் டுபிடிப்புதான். அச்சுக் கலை பரவத் தொடங்கிய காலத்தில் மதம் அவசரமாக என்ன
செய்தது தெரியுமா? அச்சுக் கலையின் சமூகப் பயன்பாடுகளைக் கண் டு மதம் மிரண் டது. துவக்க
காலத்திலிருந்து மனித அறிவின் மீது அது செலுத்தி வந்த ஆதிக்கத்தின் கருவறுத்து விடுமோ
இந்த அச்சுக்கலையும் அச்சு எந்திரங்களு ம் என்ற பயம் மதவாதிகளை பிடித்துத் தின்றது.
கடவுளு க்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என்ற வார்த்தைகளை மதம் உச்சரித்த
றிறீமீணீsமீ ஜீuக்ஷீநீலீணீsமீ றிஞிதிநீணீனீஜீ றிக்ஷீவீஸீtமீக்ஷீ ஷீஸீ லீttஜீ://ஷ்ஷ்ஷ்.ஸ்மீக்ஷீஹ்ஜீபீயீ.நீஷீனீ/ tஷீ க்ஷீமீனீஷீஸ்மீ tலீவீs ஷ்ணீtமீக்ஷீனீணீக்ஷீளீ.
பொழுதிலேயே அறிவு தனது விடுதலைக்குப் போராடத் துவங்கி விட்டது. அச்சுக் கலையோ
அறிவைத் தன் முதுகில் ஏற்றி ஊ ர்வலம் போகத் தயாராகி விட்டது. அன்று அரசன் மதத்திற்கு
முழுமையாகக் கட்டுப் பட்டிருந்தான். கத்தோலிக்க போப்பின் அதிகாரத்திற்கு முன் அரசனின்
அதிகாரம் மண் டியிட்டுதான் நின்றிருந்தது. அந்த தனது அதிகாரத்தை பயன்படுத்தி மதம் அவசர
அவசரமாக அந்த அச்சுத் துறையை தனது அதிகாரத்தின் கீழ் கொண் டு வந்தது. எந்த நூ ல்கள்
அச்சாக்கப் படவேண் டும் என்று தீர்மானிக்கிற அதிகாரத்தைத் தன்னகத்தே எடுத்துக் கொண் டது.
கி.பி. 1550-ல் நான்காம் போப் 'பால்' விலக்கி வைக்கப்பட வேண் டியவை பற்றிய
ஓர் அட்டவணை த் தொகுதியைத் தயாரிக்கும் தேர்வுநிலைக் குழு ஒன்றை
அமைத்தார். நூ ல்களையும், வெளியீடு செய்வதற்கான கையெழுத்து
பிரதிகளையும் ஆய்வு செய்து அந்நூ லை மக்கள் வாசிப்புக்கு 'அனுமதிக்கலாமா'
'கூடாதா' என்று முடிவு செய்ய வேண் டியதே அதன் பணி யாகும். அவற்றுள்
தேவலாயக் கொள்கைகளோடு உடன்பாடு உள்ள நூ ல்களில் ஒரு சில பிழைகள்
இருக்குமானால் அந்நூ ல்களைத் திருத்தம் செய்து வெளியிடுவதும் அதன் பணி யில்
அடங்கும். அதே போல், மதநிந்தனைக் கருத்துக்களை கண் டனம் செய்து தடை
அறிவிக்கும் அதிகாரத்தையும் அந்தக் குழு பெற்றிருந்தது. அது மட்டுமன்றி,
அவ்வாறு மத நிந்தனைக்குரிய நூ ல்களை நுணு கிப் படித்து அறியும் தனிப்பட்ட
சலுகையை ஒரு சில நபர்களு க்கு மட்டும் அளிக்கவும் அக் குழு அதிகாரம்
பெற்றிருந்தது. தண் டமுறை மன்றத்தை விட (மதநிந்தனையாளர்களை தண் டிக்கும்
அதிகாரம் படைத்த மதத்தின் விசாரணை மன்றம் ) இது விரிந்த அளவு அதிகாரம்
கொண் டதாக இருந்தது. ஏனெனில், அது ரோமன் கத்ததாலி'கக நம்பிக்கைகளு க்கு
மாறுபட்ட கருத்துக்களைக் கொண் ட நூ ல்களை மட்டும் தனது அதிகார
வரமபுக்குள் எடுத்துக் கொள்ளவில்லை; மாறாக, 'ஒழுக்கவியல்'. 'ஒழுங்கு,
கடமைகளைப் போதித்த நூ ல்களை, தேவாலய ஒழுங்கு விதிமுறை பற்றிய
நூ ல்களை, மற்ற சமூகத்தை பாதிக்கக்கூடிய அனைத்து நூ ல்களையும் தனது
அதிகார வரப்புக்குள் கொண் டு வந்தது. இத் தேர்வு நிலைக் குழுவின்
அட்டவணை முதலில்,' 'வாசிப்பது தடை செ ய்யப்பட்டது' அல்லது 'சட்ட
விரோதமாக்கப்ட்ட' நூ ல்களைப் பட்டியலிட்டது. பின்பு, இது போதுமானதாக
இல்லை என்று கண் டு, எவையெல்லாம் அனுமதிக்கப்படவில்லையோ
அவையெல்லாம் தடை செய்யப்பட்டது என அறிவித்தது. இது, தேவாலயத்துக்கு
உகந்ததல்லாமல் பிற அனைத்து அறிவும் மக்களைச் சென்றடையாமல் தடை
செய்ய எடுத்த கேடு கெட்ட முயற்சியாகும்.
மேற்கூறிய வார்த்தைகள் நியூயார்க்கைச் சேர்ந்த பேராசிரியருவர் (வில்லியம் டிராப்பர்)
200 வருடங்களு க்கு முன்பாக எழுதிய நூ லொன்றிலிருந்து பெறப்பட்டவையாகும். அவர்
மேலும் கூறுகிறார் இந்த நோக்கத்தில் தங்களு க்குள் அடித்துக் கொண் டிருந்த போட்டி
அமைப்புகளான கிறித்துவத்தில் இரு பிரிவுகளாகிய கத்தோலிக்கப் பிரிவிற்கும்
புராட்டஸ்டண் டு பிரிவிற்கும் எந்த வேறுபாடுமில்லை மாறாக ஒற்றுமையே நிலவியது
என்று. அந்த இரண் டு பிரிவிற்குமிடையிலிருந்த அதிகாரத்தையட்டி வேறுபட்ட
தந்திரங்களை அந்த பிரிவினர் கையாண் டனர் என்கிறார்.
இவ்வாறு, தேவாலயத்தின் இருபிரிவுகளு ம் 'புராட்டஸ்டண் டு' ‘கத்தோலிக்கர்’
இந்த ஒரு நிலைப்பாட்டில் உடன் பட்டிருந்தன. எதிலென்றால், வேதங்களு டன்
ஒத்துப் போகாத எந்த அறிவியலையும் சகித்துக் கொள்ள முடியாதென்பதில்.
கத்தோலிக்கர்கள், மய்ய அதிகாரத்தைப் பெற்றிருந்தனர். அவர்களால் தாங்கள்
றிறீமீணீsமீ ஜீuக்ஷீநீலீணீsமீ றிஞிதிநீணீனீஜீ றிக்ஷீவீஸீtமீக்ஷீ ஷீஸீ லீttஜீ://ஷ்ஷ்ஷ்.ஸ்மீக்ஷீஹ்ஜீபீயீ.நீஷீனீ/ tஷீ க்ஷீமீனீஷீஸ்மீ tலீவீs ஷ்ணீtமீக்ஷீனீணீக்ஷீளீ.
எடுக்கும் முடிவுகளை தங்களது ஆட்சிப் பகுதிகளனைத்திலும் செயல்படுத்த
முடிந்தது. அதைப் பயன்படுத்தி மேற்கூறிய தேர்வு நிலைக் குழு மூலம் தங்களது
இந்தக் கொள்கையை அமுலாக்கினர். ஆனால், புராட்டஸ்டண் டுகளின் நிலை
மாறுபட்டது. அவர்களது செல்வாக்கு பல தேசங்களில் சிதறலாகப் பரவிக்
கிடந்தது. எனவே, அவர்களால் கத்தாலிக்கர்களைப் போன்று நேரிடையான
தீர்மானகரமான முறையில் செயல்பட முடியவில்லை. அது கடைப்பிடித்த
முறையானது குற்றவாளியின் மீது {மதநிந்தனையாளர் மீது} இறையியல்
அடிப்படையிலான பழியை உருவாக்குவதாகும்; அதனால், அப்பழிக்கு ஆளான
நபர் சமூகப் புறக்கணி ப்புக்கு ஆளாவார். இம்முறை ஒன்றும் கத்தோலிக்கர்களின்
ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்திய முறையை விட குறைவான விளைவை
ஏற்படுத்தியதல்ல.
இவ்வாறு நேரிடையான அரசியல் அதிகாரம் தங்கள் கையில் இல்லாதபோது தங்கள்
மூத்த சகோதரர்கள் பினபற்றிய வழியைத்தான் இன்று தஸ்லிமா நஸ்ரீன் விசயத்தில்
இஸ்லாமிய சமயத்தவர் கையாள்கின்றனர்.
அறிவியலில் நியூட்டன் காலம் துவங்குவதற்கு முன்பு வரையில் அறிவியலுக்கு மதம்
ஏற்படுத்தி வந்த கொடுமையான தடைகளை அதன்பின் அரசியல் அதிகாரத்திலிருந்து
மதம் பிரிக்கப் பட்ட காரண த்தினால் நிறுத்திக் கொண் டது என்று கூறலாம். இன்று
மதம் அறிவியலுடன் கைகோர்த்துக் கொண் டு விட்டது. எந்த அளவுக்கு என்றால்
பண் டைய கிரேக்க அறிவிலாளரைக் கொலை செய்ததற்கு இன்றைய போப்புகள் பொது
மன்னிப்பு கேட்கிற அளவுக்கு. ஆனால் அந்த சமரசம் அறிவியலுடன் மட்டும்தான்.
அறிவியலின் தாயாகிய மனித அறிவின் கருத்து சுதந்திரத்துடன் அல்ல. அதனால்தான்
தஸ்லிமாக்களு க்கு இன்றும் இந்த நிலை.
தஸ்லிமா நஸ்ரின் வங்காளதேசத்தை சேர்ந்த ஒரு மருத்துவப் பெண் மணி . இஸ்லாமியக்
குடும்பத்தில் பிறந்த போதிலும் கல்வியாளர் குடும்பப் பிண் ண ணி இவரை ஒரு சிந்தனையாளராக
உருவாக்கியது. ஒரு நாத்திகராக பெண் ணி யவாதியாக பரிண £மம் கொண் டார். வெறும்
தொழில் முறை வைத்தியராக வாழ்ந்து மடிவதில் முடிந்து போகாமல் ஒரு சமூக மருத்துவராக
தன்னை உண ர்ந்தார் இப் பெண் . ஒரு எழுத்தாளராக, கவிதாயினியாக, நாவலாசிரியராகப்
பன்முக பரிண £மம் எடுத்தார். இவருடைய மத எதிர்ப்பானது மதத்துக்கும்
ஆண £திக்கத்துக்குமுள்ள தொடர்பை வெளிப்படுத்துவதாகவும் அமைந்தது. இவருடைய
மனிதாபிமானது இஸ்லாமிய நாடான தனது தாய் நாட்டில் இஸ்லாமியல்லாதார் படும்
இன்னல்களு க்கு எதிராக இவரைக் குரல் கொடுக்க வைத்தது. இதனால் தனது தாய் நாட்டில்
இஸ்லாமிய மதகுருமார்களின் கடுமையான கோபத்துக்காளானார். அன்று தொடங்கியது
அதாவது 1994 -ல் தொடங்கியது இவருடைய கருத்துரிமைக்கான போராட்டம். குறிப்பாக
இவர் எழுதிய லஜ்ஜா என்ற நாவல் பரபரப்பான குற்றச்சாட்டுக்காளானது. இஸ்லாமிய
மதஅடிப்படைவாதிகள் இவருக்கு ‘பஃட்வா’ என்றழைக்கப்படும் மரண தண் டனையை
அறிவித்ததுடன் இவரது உயிரை எடுப்போருக்கு பரிசளிப்பது என்ற அறிவிப்பினை
வெளியிட்டனர். நமக்குக் இன்று அந்தப் பரிசுத் தொகை எட்டாயிரம் பவுண் டுகளாம். அதன்பின்
வங்காள தேச அரசு அவருடைய நூ லாகிய ‘லஜ்ஜா’விற்கு தடை விதித்ததுடன் அவரது கடவுச்
சீட்டு உரிமையையும் முடக்கிப் போட்டது. அவரைக் கொலை செய்ய வேண் டும் என்ற குரல்கள்
வலுத்தன. ஆனால் தஸ்லிமா அவையெதற்கும் அசரவேயில்லை. மாறாக, ‘ பெண் களு க்கெதிராக
இருக்கும் உங்கள் குரானை மறுவாசிப்பு செய்து திருத்தி எழுதுங்கள்’ என்று அறிவார்ந்த
துணி ச்சலுடன் தொடர்ந்து தனது கருத்துரிமையை நிலைநிறுத்தப் போராடலானார். குறிப்பாக
றிறீமீணீsமீ ஜீuக்ஷீநீலீணீsமீ றிஞிதிநீணீனீஜீ றிக்ஷீவீஸீtமீக்ஷீ ஷீஸீ லீttஜீ://ஷ்ஷ்ஷ்.ஸ்மீக்ஷீஹ்ஜீபீயீ.நீஷீனீ/ tஷீ க்ஷீமீனீஷீஸ்மீ tலீவீs ஷ்ணீtமீக்ஷீனீணீக்ஷீளீ.
அவருடைய இந்தக் கோரிக்கையைத்தான் இஸ்லாமியர்கள் மரண வெறியுடன் அணு குகின்றனர்.
அவரைக் கொலை செய்ய வேண் டும் என்று அறிவித்தவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும்
எடுக்காத வங்கதேச அரசு தஸ்லிமா மீது அவதூ று வழக்கு பதிவு செய்து அவருக்கு வாரண் டு
பிறப்பித்தது. இரண் டாண் டுகள் வரை தனக்கு சிறைத் தண் டனை விதிக்கப்படலாம் என்று
எதிர்பார்த்த தஸ்லிமா அதற்கும் மேலாக சிறையிலேயே தான் கொல்லப்பட்டு விடக் கூடும் என்று
நியாய ள் கழித்து
சர்வ தேச மனித உரிமை நிறுவனங்களாகிய ‘அம்னெஸ்டி இண் டர்நேஷனல்’ மற்றும் ‘பென்’
ஆகிய நிறுவனங்களின் உதவியுடன் அவருக்கு பிணை யில் விடுதலையளிக்கப்பட்டு அவர்
அந்நாட்டை விட்டு வெளியேறிச் செல்ல அனுமதியளிக்கப்பட்டது.
முதலாவதாக அவருக்கு அடைக்கலம் கொடுத்த நாடு சுவீடன். அதன்பின் ஜெர்மன், மற்றும்
அமெரிக்காவில் அவர் தங்கியிருந்த விட்டு அதன்பின் இந்தியாவில் கல்கத்தாவில் குடியேறினார்.
தாய் மண் கொடூர முகங் கொண் டு நின்றாலும் உலகெங்கிலும் தஸ்லிமாவுக்கு ஆதரவுக் குரல்கள்
மேலோங்கின. அய்ரோப்பிய பாராளு மன்றம் அவருக்கு சுதந்திர சிந்தனைக்கான ‘சக்காரோவ்’
விருதினையும் இன்னும் பல விருதுகளையும் அறிவித்து பெருமைப்படுத்தியது. அவரது நூ ல்கள்
இருபது மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டிருக்கின்றன. இவ்வளவுக்குப் பின்னும் அவரது
உயிருக்கும் இருத்தலுக்குமான போராட்டம் தொடர்கிறது. அவரது சுயசரிதையின் நான்கு
பாகங்கள் வங்காள தேச அரசால் மத நல்லிண க்கத்துக்கு ஊ று விளைவிப்பவை என்று தடை
செய்யப் பட்டிருக்கின்றன. இந்தியாவின் மேற்கு வங்க அரசும் தஸ்லிமாவின் வாழ்க்கை
வரலாற்றின் மூன்றாவது பாகத்தைத் தடை செய்திருக்கிறது. ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவின்
பேரில் இந்தத் தடை விலக்கிக் கொளப்பட்டிருக்கிறது.
தனது தாய் நாட்டிலிருந்து வெளியேற்றப் பட்ட பிறகு மிக நீண் ட காலம் அய்ரோப்பாவில்
தங்கியிருந்த தஸ்லிமா கடந்த மூன்றாண் டுகளாகக் கல்கத்தாவில் தொடர்ந்து வசித்து வருகிறார்.
தனது தாய் நாட்டில் கொலை வெறியர்கள் அவருக்காக காத்திருக்கும் சூழலில் இந்தியாவில்
மேற்கு வங்காளத்தில் தொடர்ந்து தங்கியிருக்க விரும்புகிறார் தஸ்லிமா. தனது தாய் மொழி
பேசப்படும் அந்தப் பகுதி தனது தாய் நாட்டை நினைவுபடுத்துவதாக உண ர்கிற தஸ்லிமா மேற்கு
வங்கத்திலேயே குடியுரிமை கோருகிறார். ஆனால் இந்தியாவிலுள்ள இஸ்லாமிய அமைப்புகளு ம்
இஸ்லாமிய விரோதியாக தஸ்லிமாவைக் கருதி அவரை இந்த மண் ணி லும் கொலை செய்ய
முற்படுவதுடன் அவர் செல்லுமிடங்களிளெல்லாம் அவரை எதிர்த்தும் தாக்கியும் செயல்பட்டு
வருகின்றனர். இந்த நிலையில் அவர் இந்தியாவை விட்டுப் போய் விட வேண் டும் என்றே இந்திய
அரசும் நினைக்கிறது.
வெளியுறவுத் துறை அமைச்சர் பிரண £ப் முகர்ஜி நாங்கள் (இந்தியா) விருந்தினர்களை மதிக்க
விரும்புகிறோம். ஆனால் விருந்தினர்கள் எப்படி நடந்து கொள்ள வேண் டுமோ அப்படி நடந்து
கொள்ள வேண் டும் என்று கூறியிருக்கிறார். இந்த நாட்டின் சிறுபான்மைக் கமிசனின் தலைவர்
கமல் பாரூக் பிறர் மனதைப் புண் படுத்தும் விதமாக தஸ்லிமா எழுதக் கூ டாது என்கிறார்.
தஸ்லிமாவுக்கும் தஸ்லிமாவை ஆதரிப்பவர்களு க்கும் இவர்களது அகராதியில் மனமென்ற ஒன்றே
இருக்காது போலும். இவர்களது மக்களில் எப்போதுமே நாத்திகர்களு க்கு இடமிருப்பதில்லை.
பெரியார் கூறியது போல் மதச்சார்பின்மை என்றால் எந்த மதத்தையும் சாராதிருப்பது என்ற
பொருளிலல்லாமல் அனைத்து மதஙக்ளையும் சார்ந்து நிற்பது என்ற பொருளில் பயன்படுத்தும்
தேசமிது.
சமீபத்தில் ஹை தராபாத்தில் ஒரு நூ ல் வெளியீட்டு விழாவில் அவர் மீது தாக்குதல் நடைபெற்றது.
தாக்குதல் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில் நடந்தது. இதனைத் தொடர்ந்து
கல்கத்தாவில் இவருக்கு எதிரான கலகங்கள் வலுவடைந்த நிலையில் தஸ்லிமா அவரது
றிறீமீணீsமீ ஜீuக்ஷீநீலீணீsமீ றிஞிதிநீணீனீஜீ றிக்ஷீவீஸீtமீக்ஷீ ஷீஸீ லீttஜீ://ஷ்ஷ்ஷ்.ஸ்மீக்ஷீஹ்ஜீபீயீ.நீஷீனீ/ tஷீ க்ஷீமீனீஷீஸ்மீ tலீவீs ஷ்ணீtமீக்ஷீனீணீக்ஷீளீ.
விருப்பத்திற்கு மாறாக அரசாகங்த்தால் பாதுகாப்பாக டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு
மறைமுக பாதுகாப்பில் வைக்கப் பட்டிருக்கிறார். இவ்வாறு கல்கத்தாவில் தான் வாழ்ந்த
வீட்டிலிருந்து தான் அப்புறப்படுத்தப் பட்டதில் மிகுந்த வேதனையடைந்திருக்கிறார் தஸ்லிமா.
இடையில் புத்த தேவ் பட்டாச்சாரியா மேற்கு வங்க முதல்வர் (சிபிஎம்) தஸ்லிமாவை மேற்கு
வங்கத்திற்கு திரும்ப அழைப்பதாக வந்த செய்தியில் மிகவும் நெகிழ்ந்து போய் மகிழ்ச்சியுடன்
கிளம்பத் தயாரான தஸ்லிமாவை அது தவறான தகவல் என்று மீண் டும் வந்த செய்தி
துயரத்திலாழ்த்தியது.
ஒரு தனி நபர் சுதந்திரம் மட்டும்தான் தஸ்லிமாவின் விருப்பம் என்றால் அய்ரோப்பாவிலேயே
அவர் தாராளமாக நிலை ª காண் டு விடலாம். ஆனால் தஸ்லிமா தான் தோன்றிய சமூகத்தை
நேசிக்கிறார். தன் தாய் மொழியை நேசிக்கிறார். ‘நான் நலமாக இல்லை ஆனால் நான் நேசிக்கும்
என் தாய்நாடே நீ நலம் பெறுக’ என்று எழுதுகிறார். தன் தாய் மண் ணி ல் வாழ முடியாத
சோகத்தை தணி த்துக் கொள்ள அவர் மேற்கு வங்க மண் ணை நாடுகிறார். ஆனால் இந்தியா
அவருக்குக் குடியுரிமை தரத் தயாராக இல்லை. காரண ம் இந்தியாவின் இஸ்லாமிய மத
அமைப்புகள். பெண் களை பாதிக்கும் வகையில் உள்ள பகுதிகளை குரானிலிருந்து நீக்கி
அதனைத் திருத்தி எழுதுங்கள் என்ற தஸ்லிமாவின் கோரிக்கை தங்களைப் புண் படுத்துவதாகக்
கூறி அந்த எழுத்தாளர் தனது கோரிக்கையை நீக்கிக் கொள்ள வேண் டும் என்று இவர்கள்
கூறுகிறார்கள். என்ன வியப்பு பாருங்கள்! மனித சமூகத்தின் சரிபாதி பெண் ணி னத்தை
பாதிப்படைய வைக்கும் பகுதிகளை நீக்கச் சொன்னதே குற்றமாம். அது அவர்களின் மதத்தை
அவமானப் படுத்தி விட்டதாம். ஆனால் தஸ்லிமா என்ன சொல்கிறார்? உங்கள் மதத்தைப் பற்றிப்
பேச வேண் டும் என்பது எனது இலக்கல்ல. நான் எனது சமுதாயப் பெண் களைப் பற்றிப்
பேசுகிறேன்.. அவர்களு க்காகத்தான் பேசுகிறேன் என்கிறார். நான் கவனப்படுத்த விரும்பும்
விசயங்களெல்லாம் பெண் கள் உரிமைகள் , மனிதாபிமானம் மற்றும் பெண் ணி யம் இவை
மட்டுமே என்கிறார் அவர்.
மேற்கு வங்க அரசு தஸ்லிமாவின் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்க தயாராய இல்லை.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் தடை செய்யப் பட்ட அவரது சுயசரிதையின் நான்காம்
பாகமாகிய இரண் டாகப் பிரிதல் 2003 என்ற நூ லிலிருந்து
பிரச்சனைக்குரிய சில பக்கங்களை நீக்கிக் கொள்ள தஸ்லிமா முன் வந்திருக்கிறார். இந்தியாவில்
வாழ வேண் டும் என்ற அவருடைய விருப்பத்திற்கும் தேவைக்குமான விட்டுக் கொடுத்தலாக
இதனை அவர் ஏற்றுக் கொண் டுள்ளார். அதில் என்னவொரு கவனிக்கத் தக்க விசயம் என்றால்
இந்த நூ ல் ஏற்கனவே மேற்கு வங்க அரசினால் தடை செய்யப் பட்டு பின் நீதி மன்ற உத்தரவின்
வாயிலாக அந்தத் தடையானது நீக்கிக் கொள்ளப் பட்டிருக்கிறது. அதன்பின் இப்போது இந்த
மதவெறியர்கள் தஙக்ள் கலவரத்தின் மூலம் நீதி மன்ற உத்தரவிற்கப்பாற்பட்ட சமூகத் தடையை
விதித்திருக்கின்றனர். இதைத் தவிர இப்போதைய நிலையை சமாளிக்க வேறு வழியில்லை என்ற
முடிவுக்கு அவர் வந்திருக்கிறார்.
கம்யூனிஸ்ட்டுகள் ஆள்கின்ற மேற்கு வங்கத்தில் இப்படியரு நிலைமை மிகவும் வெட்கக்
கேடானதாகும். தஸ்லிமாவால் தங்கள் மாநில அமைதி கெடுவதாகச் சொல்ல இவர்களு க்கு
வெட்கமாக இல்லை? நந்திகிராமின் துப்பாக்கி சத்தம் நமக்குக் கேட்காமலா இருக்கிறது? சரி
அப்படியே இருந்தாலும் கம்யூனிஸ்ட்டுகளின் கருத்து சுதந்திரத்திற்குக்
கடமைப்பட்டவர்களில்லையா? கருத்து சுதந்திரம் என்பது கம்யூனிசம் பிறந்த கருவறை
இல்லையா? ஓட்டுகளின் எண் ணி க்கைக்கு முன்பு எல்லாமே......? ஆனால் இவ்வளவு
துன்பத்திலும் தஸ்லிமாவுக்கு நேர்மை இருக்கிறது. மோடிக்கு தாராள மனசு . தஸ்லிமாவைக்
றிறீமீணீsமீ ஜீuக்ஷீநீலீணீsமீ றிஞிதிநீணீனீஜீ றிக்ஷீவீஸீtமீக்ஷீ ஷீஸீ லீttஜீ://ஷ்ஷ்ஷ்.ஸ்மீக்ஷீஹ்ஜீபீயீ.நீஷீனீ/ tஷீ க்ஷீமீனீஷீஸ்மீ tலீவீs ஷ்ணீtமீக்ஷீனீணீக்ஷீளீ.
காப்பாற்ற தயாராக இருக்கிறாராம். தஸ்லிமா கூறுகிறார், ‘என்னை வைத்து அரசியல்
செய்யாதீர்கள்’
ஆனால் இவ்வளவு சூழலுக்கும் அடிப்படைக் காரண ம் தஸ்லிமாவுக்கு ஆதரவான
பொதுக்கருத்தைத் திரட்ட வேண் டிய முற்போக்கு அமைப்புகளு ம் சமூக நீதிக்காக
இவ்வியக்கங்களு டன் இணை ந்து நிற்கும் மதச்சிறுபான்மை அமைப்புகளு ம் தீவிரமாகக் கூட
அல்ல குறைந்த பட்சமாகக் கூட இதில் செயல்படாததுதான். தஸ்லிமாவுக்கு ஆதரவாக
வாக்களிக்கக் கோரி ஓர் இணை ய தளம் செயல்படுகிறது. அதில் அளிக்கப்படும் வாக்குகள்
விண் ண ப்பங்கள் மய்ய அரசுக்கு அனுப்பப்படுகிறது என்று அந்த இணை ய தளம் தெரிவிக்கிறது.
அதில் என்னுடைய விண் ண ப்பத்தையும் சேர்த்து இதுவரை வந்திருக்கும் விண் ண ப்பங்கள்
மொத்தம் 1025 தான். இணை யதள முகவரி ஷ்ஷ்ஷ்.ஜீமீtவீtவீஷீஸீ ஷீஸீ றீவீஸீ மீ.நீஷீனீ.
இதனைப் பார்க்கும் போது பெண் களு க்கு தேசமில்லை என்பது உண் மைதான். ஆனால்
பெண் களு க்கு தேசங்கள் வேண் டும். தஸ்லிமாவுக்கு வங்காளம் தேவைப்படுவதைப் போல.
றிறீமீணீsமீ ஜீuக்ஷீநீலீணீsமீ றிஞிதிநீணீனீஜீ றிக்ஷீவீஸீtமீக்ஷீ ஷீஸீ லீttஜீ://ஷ்ஷ்ஷ்.ஸ்மீக்ஷீஹ்ஜீபீயீ.நீஷீனீ/ tஷீ க்ஷீமீனீஷீஸ்மீ tலீவீs ஷ்ணீtமீக்ஷீனீணீக்ஷீளீ.
நன்றி.... தமிழ்த்தேசம் திங்களிதழ்

என்னை ஊமையாக்க முடியாது ---------ஓவியா

நான் ஒரு இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தேன் ஆனால் இன்று ஒரு நாத்திகராக
வளர்ந்திருக்கிறேன். அறிவியல் பயிற்சியை நான் எடுத்த போது உற்று நோக்குதல். சோதித்தல் ஆய்வு
செய்தல் மேலும் காரண காரியங் களை அறிதல் ஆகிய பண்புகளை வளர்த்துக் கொண்டேன். காரண
காரியமின்றி எதுவும் உண்மையென ஏற்றுக் கொள்ளப் படக்கூ டாது. நான் அநீதியை எதிர்த்தும்
அறியாமையை எதிர்த்தும் மூடநம்பிக்கைகளை எதிர்த்தும் போராடிக் கொண்டிருக்கிறேன். நான்
மதத்தின் கொடுமைகளைக் குறிப்பாக பெண்களுக்கெதிரான அநீதியையும் ஒடுக்குமுறையையும்
அடையாளங் காட்டுகிறேன்.
மனித உரிமைகளை தங் களது தலையாய நோக்கங் களாக அறிவித்திருக்கும் சில
மேற்கத்திய நாடுகள், வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் மத அடிப்படைவாதத்திற்கும்
ஆதரவளித்து வருவது என்னை வியப்படைய வைக்கிறது. குறுகிய கால அரசியல் இலாபங்
களுக்காக மக்களாட்சி அரசுகள் இராணுவ சர்வாதிகாரத்தை ஒப்புக் கொள்கின்றன. மதச் சார்பற்ற
நாடுகள் எதேச்சதிகாரத்துடனும் பழமைவாதத்துடனும் நட்பு பாராட்டிக் கொள்கின்றன. ஏன் அவர்கள்
நாடுகளின் மத அடிப்படைவாதிகளின் ஒரு சிறிதும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளையும் அவை
சகித்துக் கொள்கின்றன. மக்களாட்சி எனவும் மதச்சார்பற்ற நாடுகள் என்றும் தங் களை அழைத்துக்
கொள்கின்ற இந்த நாடுகளின் இத்தகைய இரட்டை நடைமுறைகள்தாம் மத அடிப்படைவாதிகளுக்கு
ஒருவிதமான அங்கீகாரத்தை வழங்கி விடுகின்றன. இவர்களின் வற்புறுத்தல்களுக்கு பணிந்து இந்த
அரசுகள் எழுத்தாளர்களை சிறை வைக்கவும் அவர்களுடைய நூல்களை தடை செய்யவும்
தலைப்படுகின்றனர்.
சில மேற்கத்தியர்கள் மூன்றாம் உலக நாடுகளின் அனைத்து மரபுகளுமே பெண்களுக்கு தீமை
பயப்பவையல்ல. அவை கீ ழ நாடுகளின் சமூ க அமைதிக்கும் நிலையான வாழ்க்கைக்கும் காரணிகளாக
அமைகின்றன என்று கூறகின்றனர். இக்கூற்று சுத்த முட்டாள்தனமானதாகும்.
- தஸ்லிமா

மீண்டும் மதவாதிகளால் தாக்கப்பட்டிருக்கிறார் தஸ்லிமா நஸ்ரின். ஹைதராபாத்தில் தனது நூலின்
மொழிபெயர்ப்பு வெளியிடப்படும் நிகழ்ச்சியையட்டி அதில் கலந்து கொள்ள சென்றிருந்த தஸ்லிமா நஸ்ரின்
எம்.அய்.எம் இயக்கத்தைச் சேர்ந்த மதவெறியர்களால் தாக்கப்பட்டு காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்
பட்டிருக்கிறார். இதில் அதிர்ச்சிக்குரிய மற்றொரு உண்மை என்னவென்றால் இந்த தாக்குதல் முகமது முக்ததா கான்,
சையது அகமது பாட்சா, முகமது மொசாம் கான் ஆகிய 3 சட்ட மன்ற உறுப்பினர்கள் தலைமையில் நடந்திருக்கிறது.
இவர்கள் உடனே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவை விட்டு உடனே வெளியேறாவிட்டால் தஸ்லிமாவைக்
கொன்று விடுவோம் என்று இஸ்லாமியத் தீவிரவாதிகளும் சில மதகுருமார்களும் மிரட்டல் எச்சரிக்கை கொடுத்துள்ளனர்.
சாதியின் பேராலும் மதத்தின் பேராலும் நடக்கும் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நம்மைத் தலைகுனிய
வைக்கின்றன. 1994-ம் ஆண்டில் தனது நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட தஸ்லிமாவை தொடர்ந்து மதவாதிகள்
துரத்தியே வருகின்றனர். இப்போது நடந்திருக்கும் இந்த தாக்குதலை இஸ்லாமிய கல்வியாளர்களும் சில முக்கிய
தலைவர்களும் கண்டனம் செய்து அறிக்கை வெளியிட்டிருந்தாலும் இணைய தளத்தில் பொதுவாகக் கருத்து
தெரிவித்திருக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் பலரும் தஸ்லிமா மீது வெறுப்பை கக்கியிருப்பது வேதனையளிப்பதாக
இருக்கிறது. தஸ்லிமா தாக்கப்பட்டதைக் கண்டித்திருக்கும் டெல்லி சிறுபான்மை கமிசனின் தலைவர் ‘கமல் பாருக்’ அதே
நேரத்தில் இஸ்லாமியர்களின் மத உணர்வை புண்படுத்தும் விதமாக எழுதுவதிலிருந்து தஸ்லிமா தடுக்கப்பட வேண்டும்
என்று கூறியிருக்கிறார். அது மட்டுமின்றி அவருடைய விசா உடனே இரத்து செய்யப்பட்டு இந்தியாவை விட்டு
வெளியேற்றப் பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார். இந்தியா அனைத்து மத உணர்வுகளுக்கும்
மதிப்பளிக்கின்ற நாடு என்று கூறியிருக்கும் அவர் எல்லா மத நல்லிணக்க வாதிகளைப் போலவே வசதியாக
நாத்திகர்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் மக்கள் உரிமைகளாக கணக்கில் சேர்க்கவேயில்லை. வங்க தேச மாநில
அரசு அவர் மீதான தாக்குதலைக் கண்டித்திருந்த போதிலும் அவரது நூலான திவிண்டிகோ "ஞிஷ்வீளீலீணீஸீபீவீtஷீ" (ஷிஜீறீவீt வீஸீ
ஜிஷ்ஷீ) விற்கு தடை விதித்திருந்தது. மதநல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் என்பதாக இந்தத் தடை விதிக்கப்
பட்டது. இந்நூல் அவருடைய சுயசரிதையின் ஏழாவது பாகமாகும். இப்போது நீதிமன்ற உத்தரவின்
மூலமாக அந்தத் தடை நீக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடையானது கடந்த ஆணடு நவம்பர் 27 ம்
நாளன்று விதி க்கப்பட்டது. மனித உரிமை ஆர்வலர் சுஜாட்டோ பத்ரா ஷிuழீணீtஷீ ஙிலீணீபீக்ஷீணீ இதனை எதிர்த்து வழக்க
தொடர்ந்து இந்தத் தடையாணையை நீக்குவதில் வெற்றி பெற்றிருக்கிறார். இப்போது அரசு வேறு புதிய
தடையாணையைப் பிறப்பிக்க முடியுமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறது.
அந்த வீரப் பெண்மணியோ, ‘என்னை உங்களால் ஊமையாக்க முடியாது’ என்று அறைகூவல்
விடுத்துத் தனது கருத்துரிமைக்கான போரை தொடர்ந்து நடத்தி வருகிறார். அவரது அந்த கருத்துரிமைப் போருக்கு
மரியாதை அளிக்கும் விதமாகவும் அவரது வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வினை பொது மக்கள்
மத்தியில் உருவாக்கிடவும் இக்கட்டுரை எழுதப்படுகிறது.
தஸ்லிமா நஸ்ரின் வங்காளதேசத்தில் மைமென்சிங் என்ற இடத்தில் பிறந்தவர். ஒரு மருத்துவரும்
பேராசிரியருமான தந்தையின் மகளாவார். இவரும் மருத்துவரே. ஒரு இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்த தஸ்லிமா
தன்னை ஒரு நாத்திகர் என்று அறிவித்துக் கொண்டதுடன் பெண்களின் சம உரிமைக்கும் குரல் கொடுப்பவராக
விளங்கினார். அத்துடன் அவர்களது நாட்டில் சிறுபான்மையினராக இருக்கும் இஸ்லாமியரல்லாத சமூகத்தவரை
அந்த நாட்டில் கொடுமைக்குள்ளாக்குவது பற்றி விமர்சனக் கருத்து கொண்டிருந்தார். அதனை எதிர்க்கவும்
தலைப்பட்டார். மேலும் தனது இளவயதில் தனது உறவினர்களாலேயே தான் பாலியல் கொடுமைக்காளாக்கப்பட்டதாகத்
தெரிவிக்கும் தஸ்லிமா நஸ்ரின் மிகத் தீவிரமான பெண்ணியவாதியாக தன்னை வளர்த்துக் கொண்டார். ஒரு கவிஞராகவும்
கட்டுரையாளராகவும் துவக்கத்தில் அறியப்பட்ட இவர் விரைவிலேயே மதத்தின் மீதும் குறிப்பாக இஸ்லாமிய மதத்தின்
மீதும் வைத்த கடுமையான விமர்சனக் கண்ணோட்டங்களால் பரபரப்பான அவதூ றுகளுக்காளானார்.
1993-ல் இவர் இஸ்லாமிய சமூகத்தில் நிலவும் பெண்கள் மீதான ஒடுக்குமுறை குறித்து தொடர்ந்து பத்திரிகைகளில்
எழுதத் துவங்கினார். இதனால் மதவாதிகளின் கடுங்கோபத்துக்காளானார். இதனைத் தொடர்ந்து இஸ்லாமிய மத
அடிப்படைவாதிகள் இவருக்கு ‘பஃட்வா’ என்றழைக்கப்படும் மரண தண்டனையை அறிவித்ததுடன் இவரது உயிரை
எடுப்போருக்கு பரிசளிப்பது என்ற அறிவிப்பினை வெளியிட்டனர். இக்கொடூரம் நாகரீக உணர்வு படைத்த சராசரி
மனிதர்களையும் பகுத்தறிவுள்ளமும் நாத்திக சிந்தனையுங் கொண்ட பண்பாளர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது.
அப்போது நாங்கள் நடத்திக் கொண்டிருந்த புதியகுரல் இதழை நாங்கள் ‘தஸ்லிமா சிறப்பிதழாக’ வெளியிட்டோம்.
ஆனால் அன்று நாங்கள் குரல் கொடுத்தது இந்தியாவிற்கு வெளியில் நடந்த ஒரு கொடுமைக்காக. ஆனால் இன்று
அந்தக் கொடுமை வளர்ந்து இந்தியாவிலேயே நடக்குமளவுக்காகி விட்டது. அதன்பின் வங்காள தேச அரசு அவருடைய
நூலாகிய ‘லஜ்ஜா’விற்கு தடை விதித்ததுடன் அவரது கடவுச் சீட்டு உரிமையையும் முடக்கிப் போட்டது. அவரைக்
கொலை செய்ய வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன. ஆனால் தஸ்லிமா என்ற அந்த அதிசயப் பெண் அவையெதற்கும்
அசரவேயில்லை. மாறாக, ‘ பெண்களுக்கெதிராக இருக்கும் உங்கள் குரானை மறுவாசிப்பு செய்து திருத்தி எழுதுங்கள்’
என்று அறிவார்ந்த துணிச்சலுடன் தொடர்ந்து தனது கருத்துரிமையை நிலைநிறுத்தப் போராடலானார். அவரைக்
கொலை செய்ய வேண்டும் என்று அறிவித்தவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத வங்கதேச அரசு தஸ்லிமா
மீது அவதூறு வழக்கு பதிவு செய்து அவருக்கு வாரண்டு பிறப்பித்தது. இரண்டாண்டுகள் வரை தனக்கு சிறைத்
தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்த்த தஸ்லிமா அதற்கும் மேலாக சிறையி லேயே தான் கொல்லப்பட்டு
விடக் கூடும் என்று நியாயமாக அஞ்சினார். எனவே அவர் தலைமறைவானார். இதன்பின் இரண்டு மாதங்கள்
கழித்து சர்வ தேச மனித உரிமை நிறுவனங்களாகிய ‘அம்னெஸ்டி இண்டர்நேஷனல்’ மற்றும் ‘பென்’ ஆகிய
நிறுவனங்களின் உதவியுடன் அவருக்கு பிணையில் விடுதலையளிக்கப்பட்டு அவர் அந்நாட்டை விட்டு வெளியேறிச்
செல்ல அனுமதியளிக்கப்பட்டது.
முதலாவதாக அவருக்கு அடைக்கலம் கொடுத்த நாடு சுவீடன். அதன்பின் ஜெர்மன், மற்றும் அமெரிக்காவில்
அவர் தங்கியிருந்த விட்டு அதன்பின் இந்தியாவில் கல்கத்தாவில் குடியேறினார். தாய் மண் கொடூர முகங் கொண்டு
நின்றாலும் உலகெங்கிலும் தஸ்லிமாவுக்கு ஆதரவுக் குரல்கள் மேலோங்கின. அய்ரோப்பிய பாராளுமன்றம் அவருக்கு
சுதந்திர சிந்தனைக்கான ‘சக்காரோவ்’ விருதினையும் இன்னும் பல விருதுகளையும் அறிவித்து பெருமைப்படுத்தியது.
அவரது நூல்கள் இருபது மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டிருக்கின்றன. ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன்,
நார்வே, பங் களாதேஷ் இந்தி யா மற்றும் பல அய்க்கிய நாட்டு நிறுவனங் கள் இவரது சிந்தனைக்கும் எழுத்துக்கும்
பாராட்டுக்களையும் விருதுகளையும் குவித்துள்ளன. சர்வதேச மதச்சார்பற்ற மற்றும் நாத்திக அமைப்பும் இவருக்கு
பாராட்டி விருது வழங்கியுள்ளது. இவ்வளவுக்குப் பின்னும் அவரது உயிருக்கும் இருத்தலுக்குமான போராட்டம்
தொடர்கிறது என்பதுதான் மிகப் பெரிய வேதனையாகும். அவரது சுயசரிதையின் நான்கு பாகங்கள் வங்காள தேச
அரசால் மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிப்பவை என்று தடை செய்யப் பட்டிருக்கின்றன. இந்தியாவின் மேற்கு
வங்க அரசும் தஸ்லிமாவின் வாழ்க்கை வரலாற்றின் மூன்றாவது பாகத்தைத் தடை செய்திருக்கிறது. ஆனால் உச்ச
நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும் மேற்கு வஙக்த்தில் அவர்
தொடர்ந்து தங்கக் கூடாதென்றும் ஆறு மாதங்களில் வெளியேறிவிட வேண்டுமென்றும் ஏற்கனவே தெரியப்படுத்தப்
பட்டுள்ளது. அவர் எவ்வளவோ மன்றாடிக் கேட்டும் இந்திய அரசு அவருக்குக் குடியுரிமை வழங்க மறுத்து விட்டது.
கல்கத்தாவில் இருப்பது தனது சொந்த மண்ணில் இருக்கும் உணர்வைத் தனக்கு தருவதாகவும் எனவே இங்கேயே
தொடர்ந்து தங்கியிருக்க விரும்புவதாகவும் தஸ்லிமா தெரிவித்திருந்தார். ஆனால் இந்திய அரசு அவருடைய
கோரிக்கைக்கு இன்று வரை இணங்கவில்லை.
இவரது எழுத்துக்கள் மிகவும் உணர்ச்சி நிரம்பியவையாக இருக்க வேண்டும் என்பதற்கு இவரது நூல்களின்
தலைப்புகளே சாட் சியாக உள்ளன:
இவரது கட்டுரைகளின் தலைப்புகள்
1. தேர்ந்தெடுக்கப் பட்ட தொகுதிகள் (ஷிமீறீமீநீtமீபீ சிஷீறீuனீஸீs)
2. நான் போக மாட்டேன், ஏன் போக வேண்டும்? (மி ஷ்வீறீறீ ஸீஷீt ரீஷீ; ஷ்லீஹ் sலீஷீuறீபீ மி?)
3, தூய்மையற்ற ஒரு சிறுமியின் தூ ய்மையற்ற கவிதைகள் (மினீஜீuக்ஷீமீ ஜீக்ஷீஷீsமீ ஷீயீ ணீஸீ வீனீஜீuக்ஷீமீ ரீவீக்ஷீறீ)
4. சிறிய சோகக் கதைகள் (sனீணீறீறீ sணீபீ stஷீக்ஷீவீமீs)
நாவல்கள்
1. எதிர்ப்பு - 1992 (ளிஜீஜீஷீsவீtவீஷீஸீ)
2, பழி - 1992 (ஸிமீஸ்மீஸீரீமீ)
3. அழைப்பு - 1993 (மிஸீஸ்வீtணீtவீஷீஸீ)
4. திரும்புதல் - 1993 (ஸிமீtuக்ஷீஸீ)
5. அவனிடம் அந்த இரகசியத்தை சொல்லுங் கள் - 1994 (ஜிமீறீறீ பிவீனீ ஜிலீமீ ஷிமீநீக்ஷீமீt)
6. அவமானம் (லஜ்ஜா) (ஷிலீணீனீமீ)
சுயசரிதை தொடர்கள்
1, எனது குழந்தைப் பருவம் 1999 (விஹ் நிவீக்ஷீறீலீஷீஷீபீ)
2. சூறாவளி 2002 (கீவீறீபீ கீவீஸீபீ)
3. பேசு 2003 (ஷிஜீமீணீளீ ஹிஜீ)
4. இரண்டாகப் பிரிதல் 2003 (ஷிஜீறீவீt வீஸீ ஜிஷ்ஷீ)
5. அந்த இருண்ட நாட்கள் 2004 (ஜிலீஷீsமீ ஞிணீக்ஷீளீ ஞிணீஹ்s)
6, இஸ்லாமிய சமூகத்தில் வளர்கின்ற ஒரு பெண்ணின் வாழ்க்கை வரலாறு கி விமீனீஷீவீக்ஷீ ஷீயீ நிக்ஷீஷீஷ்வீஸீரீ ஹிஜீ திமீனீணீறீமீ
வீஸீ ணீ விusறீவீனீ கீஷீக்ஷீறீபீ
7. நான் நலமாக இல்லை ஆனால் நான் நேசிக்கும் எனது நாடே நீ நலம் பெறுக 2006 (மி கினீ ழிஷீt திவீஸீமீ, ஙிut சீஷீu
ஷிtணீஹ் கீமீறீறீ விஹ் ஙிமீறீஷீஸ்மீபீ சிஷீuஸீtக்ஷீஹ்)
மனித இன வரலாற்றிலேயே மிக நீண்ட காலமாக நடந்து வந்திருக்கும் போராட்டம் மதத்திற்கும் சுதந்திர
சிந்தனைக்குமிடையிலான போராட்டம்தான். மதத்தை எதிர்க்காத யாரிடமிருந்தும் இதுவரை மனித இன
விடுதலைக்கான எந்தவொரு தத்துவமும் பிறக்கவில்லை. சிந்தனைக்கான விடுதலையே பிற விடுதலைச்
சிந்தனைகளுக்கான கருவறையாகும். இந்தப் போராட்டத்தில்தமான் தஸ்லிமாவும் தன்னை அய்க்கியப் படுத்திக்
கொண்டிருக்கிறார். இதனை அவர் வார்த்தைகளிலேயே காண்போம்.
“ஒரு மதம் தனக்கு மாறுபட்ட கருத்துக்களுள்ள மனிதர்களை துன்புறுத்துமேயானால். ஒரு
மதம் தனது சமுதாயப் பெண்களை அடிமையாக்குமேயானால் , ஒரு மதம் தனது மக்களை
அறியாமையில் வைத்திருக்குமேயானால், அது எந்த மதமாக இருந்தாலும் அதனை நான் ஏற்றுக்
கொள்ள முடியாது.
மனித சமுதாயம் நிச்சயமற்ற எதிர்காலத்தை சந்தித்துக் கொண் டிருக்கிறது. புதிய முரண்
பாடுகள் மற்றும் போட்டிகளுக்கான தளம் விரிவடைந்து கொண்டே போகிறது. இன்றைய மனித
இனத்தின் முக்கிய முரண்பாடு இரண்டு கருத்தியல்களுக்கிடையில்தான் இருக்கிறது. அது
என்னவெனில் மதச்சார்பின்மைக்கும் மத அடிப்படைவாதத்திற்குமான முரண்பாடுதான்.
இம்முரண்பாடானது ஏதோ இரண்டு மதங்களுக்கிடையிலான கிறித்துவத்துக்கும் இஸ்வா£த்துக்குமான
அல்லது ஜு டோயிசத்துக்கும் இஸ்லாத்துக்குமான பிரச்சனை என யாராவது கூறினால் அதை நான்
ஒத்துக் கொள்ள மாட்டேன். அனைத்து மதங்களிலுமே மத அடிப்படைவாதிகள் இருக்கிறார்கள்.
மத்திய யுகத்தின் புனிதப் போர்கள் மீண்டும் நடைபெறப் போவதாக சிலர் கூறுவதை நான் ஏற்றுக்
கொள்ளவில்லை. மேலும் இம்முரண் பாடானது மேற்கத்திய நாடுகளுக்கும் கீழை
நாடுகளுக்கிடையிலானதுமல்ல.
என்னைப் பொறுத்தவரையில் இம்முரண்பாடானது அடிப்படையில் நவீன தர்க்கவியல்
பகுத்தறிவுவாதத்துக்கும் கண்மூடித்தனமான மூடநம்பிக்கைக்குமிடையிலானதுதான்.
இம்முரண்பாடானது பண்பட்ட நாகரீக சிந்தனைக்கும் அதற்து எதிரான சிந்தனைக்கும்
இடையிலானதுதான். சிலர் முன்னோக்கிச் செல்ல முற்படும்போது சிலர் பின்னோக்கி இழு க்கிறார்கள்.
இது கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்குமான, கண்டுபிடிப்புகளுக்கும் மரபுகளுக்குமான,
சுதந்திரத்தை மதிப்பவர்களுக்கும் அதனை மதிக்காதவர்களுக்குமான போராட்டம்.
தஸ்லிமாவின் இவ்வாக்கியஙக்ள் வரலாற்றின் மிக நீண்ட போராட்டத்தின் தொடர்ச்சியில் அவர் நிற்கிறார்
என்பதை நமக்கு உணர்த்துகின்றன. மேலும் நமது உள்நாட்டுச் சூ ழல்களில் எந்த அரசியல் நிலைப்பாடு நாம்
எடுத்தாலும் உலக மனித இன வரலாறு தொடர்ந்து சந்தித்து வரும் இந்த போராட்டத்தில் நாம் நிற்க வேண்டிய
இடத்தையும் அதன் தேவையையும் நமக்கு உணர்த்தி நிற்கின்றன.
உலகின் அனைத்து மக்களுக்குமான கருத்துரிமைக்கும் சுதந்திரத்துக்கும் மனித உரிமைகளுக்காகவும் தான்
போராடுவதாக அறிவிக்கும் தஸ்லிமா எது வந்த போதிலும் தன்னுடைய மரணம் வரை தான் தொடர்ந்து குரல்
கொடுத்துக் கொண்டேதான் இருப்பேன் என்னை யாரும் ஊமையாக்கி விட முடியாது என்று பறையறிவிக்கிறார்.
அந்தக் குரலே நம்முடையதாகவும் இருக்கட்டும்.
தஸ்லிமா நம்மவர்
தஸ்லிமா நஸ்ரின் ஒரு நாத்திகர்.
தஸ்லிமா நஸ்ரின் ஒரு மத எதிர்ப்பாளர்.
எப்படி தலைவர் பெரியார் அவர்கள் நான் பிறந்த நாட்டின் மதமாகிய இந்து மதம்தான் எனது முதல் இலக்கு பிற
மதங் கள் அதற்குப் பிறகுதான் என்று தனது எதிர்ப்பை வரிசைப்படுத்தினாரோ அதே நிலையில்தான் தஸ்லிமாவும்
தனது மக்களை நசுக்கிக் கொண்டிருக்கிற இஸ்லாமிய மதத்தை தனது முதல் இலக்காகக் கொண்டிருக்கிறார். நமக்கு
எப்படியோ அப்படித்தான் அவருக்கும்.
தஸ்லிமா நஸ்ரின் ஒரு பெண்ணியவாதி
தனது சமுதாயப் பெண்களின் உரிமைகளுக்காக தனது நாட்டையே எதிர்த்து போராடிக் கொண்டிருப்பவர்.
நாத்திகர்கள், மத எதிர்ப்பாளர்கள், பெண்ணியவாதிகள் உலகளாவிய மாந்தர்கள். காலத்தின்
முன்னோடிகள். தேசஙக்ள் துரத்தட்டுமே. எதிர்காலம் இவர்களுக்கானது. தோற்கப் போவது
இந்தத் தேசஙக்ள்தான். மனிதத்துக்கும் மதத்திற்குமான போராட்டம் புதிதல்ல. அதில்
மதங்கள்தான் எப்போதும் தோற்கும் என்பதும் புதிதல்ல. அதுதான் வரலாறு.

நன்றி.... சிந்தனையாளன் திங்களிதழ்